Wednesday 29th of September 2021 02:43:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆக்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கம் அறிவிப்பு;  முக்கிய பதவிகள் பல கடும்போக்குவாதிகள்!

ஆக்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கம் அறிவிப்பு; முக்கிய பதவிகள் பல கடும்போக்குவாதிகள்!


ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தாலிபன் தலைமை நேற்று இரவு அறிவித்தது. இடைக்கால அரசாங்கத்தில் பல கடும்போக்குவாதிகள் முக்கிய பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய இராச்சியமாக (Islamic Emirate) தலிபான்கள் பிரகடனம் செய்துள்ளனர்.

தலைநகர் காபூலில் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹிதின், இடைக்கால அரசில் பிரதமர், துணைப் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார்.

இடைக்காலப் பிரதமராக பிரதமர் - முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாலிபன் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஒமரின் கூட்டாளியாக இருந்தவர் முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த்.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் ஆட்சியில் இருந்தபோது துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவியை இவர் வகித்தவர். முந்தைய தாலிபன் ஆளுகையின்போது கந்தஹார் மாகாண ஆளுநராகவும் இருந்துள்ளார்.

இவரை பிரதமர் பதவிக்கு தாலிபன் அதிஉயர் தலைவர் ஹெபடுலா அகுந்த்ஸாதா தேர்வு செய்திருக்கலாம் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இடைக்காலப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி ஐயால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார்.

இதேவேளை, துணை பிரதமர்களாக முல்லா அப்துல் கனீ பரதர், மெளலவி அதுல் சலாம் ஹனாபி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி அறிவிக்கப்பட்டார். இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகனாவார். இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சராக தாலிபன் நிறுவனர் முல்லா ஒமரின் மகனான முல்லா மொஹம்மத் யாகூப் முஜாஹித் அறிவிக்கப்பட்டார்.

வெளியுறவு அமைச்சராக மெளலவி ஆமிர் கான் முட்டாக்கி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சராக முல்லா ஹிதாயத் பத்ரி, நீதி அமைச்சராக - அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி, தகவல் தொடர்புத் துறை அமைச்சராக கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முறைப்படியான அரசு அமையும்வரை இடைக்கால அரசை இவர்கள் வழிநடத்துவார்கள் என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய விதிகள் மற்றும் ஷரிய சட்டத்தை அரசு பராமரிக்கும் என தாலிபன் இயக்கத்தின் அதிஉயர் தலைவர் ஹெபடுலா அகுந்த்ஸாதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தேசத்தின் உயரிய நலன்களை பாதுகாத்து, அமைதி, வளம், வளர்ச்சி தழைத்தோங்க பொறுப்பில் உள்ளவர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஷரிய சட்டத்துக்கு உட்பட்டு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான மதம் மற்றும் நவீன அறிவியல் சூழ்நிலைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யப்படும் எனவும் அவா் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE