Wednesday 29th of September 2021 12:58:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரபல கவிஞரும், ஈழ ஆதரவாளருமான  புலமைப்பித்தன் இன்று காலமானார்!

பிரபல கவிஞரும், ஈழ ஆதரவாளருமான புலமைப்பித்தன் இன்று காலமானார்!


பிரபல கவிஞரும், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட ஆதரவாளரும், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராக இருந்தவருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை தனது 86-ஆவது வயதில் காலமானார்.

தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராக, அரசவைக் கவிஞராக அதிமுக அவைத்தலைவரகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் புலவர் புலமைப்பித்தன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரான இவர், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவராவார்.

ஈழத் தமிழர் விவகாரம் தமிழ்நாட்டில் உச்சம் தொட்டபோது தமிழ் நாட்டில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் அடிக்கடி சென்று உரையாடும் இடமாக புலமைப்பித்தனின் வீடு இருந்தது.

அத்துடன், ஈழ விடுதலைக்குப் பங்காற்றி, உதவிகளைக் செய்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் 22 ஆண்டுகள் இணைந்து இருந்த புலமைப்பித்தன், போராட்டத்துக்கான ஆதரவைக் பெற்றுக்கொடுப்பதிலும் பெரும் பங்காற்றினார்.

சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் ''நான் யார் நான் யார்'' பாடலின் மூலம் எம்.ஜி.ஆரின் அபிமானத்தைப் பெற்றார். பின்னர் அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா போன்ற பாடல்களையும் எழுதி தொடர்ந்து புகழ் பெற்றார்.

இதயக்கனி திரைப்படத்தில் நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற மிகவும் புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே. சிரித்து வாழ வேண்டும், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட இவர் எழுதிய ஏராளமான சமூக அக்கறையுள்ள பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறையாத இடத்தைப் பெற்றுத் தந்தன.

உன்னால் முடியும் படத்தில் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்று கமல்ஹாசனுக்கும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

நாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே, சிவக்குமாரின் 100-வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இடம் பெற்ற உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி போன்ற பாடல்களையும் இவரே எழுதியுள்ளார். வடிவேலு நடித்த எலிபடத்தில் தனது கடைசி பாடல்களை புலமைப்பித்தன் எழுதினார்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE