Thursday 25th of April 2024 11:14:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில்  கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி!

தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி!


இந்துக்களின் முக்கிய விழாக்களின் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொரோனா தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கடும் சுகாதார கட்டுப்பாட்டு விதிகளுடன் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருடந்தோரும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில் இம்முறை நிகழ்வுகளை நடத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் மட்டும் 20,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதேபோல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை தனி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைத்து செல்லலாம் என்றும் இங்கு வைக்கப்படும் சிலைகளை முறையாக கரைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE