Thursday 25th of April 2024 01:08:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
வரலாற்று சிறப்பு மிக்க  நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!


வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று காலை ஆரம்பமாகியது.

கிரியைகள் யாவும் பிரதம குரு கலாதர குருக்கள், தலமையில் பிரபாகரக் குருக்கள், ஆலய பிரதம குரு பிரசாத் சர்மா ஆகியோர் இணைந்து நடாத்தினர்.

அலங்கார உற்சவம் வழமையாக 7 ம் திருவிழா கப்பல் திருவிழாவும், எட்டாம் திருவிழா வேட்டை திருவிழாவும், ஒன்பதாம் திருவிழா சப்பறத் திருவிழாவும், பத்தாம் நாள் சமுத்திர தீர்த்தம் இடம் பெறுவது வழமை.

ஆனால் தற்போதைய சூழலில் கொரோனா பெருந் தொற்றை கட்டுப் படுத்துவதற்க்காக பத்துப் பேருடன் மட்டும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றி ஆலய உள் வீதியில் சுவாமி வலம் வருவதற்க்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது என ஆலய பொருளாளர் திரு பத்தமநாதன் அடியார்களுக்கு அறிவித்துள்ளதுடன் ஊடகங்கள் வாயிலாக உற்சவத்தை காணுமாறும் நாகதம்பிரான் அடியார்கள் ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE