Wednesday 24th of April 2024 03:03:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தினை இழந்த பெண்!

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தினை இழந்த பெண்!


நாட்டின் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் அன்றாட ஜீவனோபாய தொழிலை மாத்திரம் நம்பி வாழும் பல்வேறு குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்த நிலையில் காணப்பட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அன்றாட தொழிலாளர்கள் முதல் அரச உத்தியோகத்தர்கள் சகிதம் தங்களது வாழ்க்கையை திறம்பட நடாத்த முடியாத சூழ்நிலையில் காணப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் ஹ{ஸைனியா வீதியில் வசிக்கும் அமீர்அலி சித்தி சுகைரா (வயது 46) என்பவர் தனது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்லும் வகையில் கைப்பணிப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். தற்காலத்தில் இவரது கைப்பணி வியாபாரம் அனைத்தும் தடைப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ள நிலையில் தனது கணவரின் வருமானம் போதாமை காரணமாக சுமார் பத்து வருடங்களாக களிமண் மூலம் உற்பத்தி பொருட்களும், மூன்று வருடங்களாக சிரட்டை மூலம் பொருட்களையும், நூல் மூலம் தொட்டில் போன்ற உற்பத்திகளை செய்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விற்பனை செய்து வருகின்றார்.

நாட்டின் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுவதாக ஓட்டமாவடியைச் சேர்ந்த அமீர்அலி சித்தி சுகைரா (வயது 46) என்பவர் கவலை தெரிவித்துள்ளார்.

என்னால் களிமண் மற்றும் சிரட்டை மூலம் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களையும், நூல் மூலம் தொட்டிலினையும் தற்காலத்தில் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. அத்தோடு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக உபகரணம் இன்மையால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றேன்.

எனவே எனது கைப்பணியை திறம்பட மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி உற்பத்தி செய்வதற்காக உபகரணங்களை வழங்கி எனது உற்பத்தியை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்வதுடன், என்னால் சுயதொழில் தொழில் செய்ய ஆர்வமாக உள்ள பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கவும் முடியும் என்று தெரிவிக்கின்றார்.

இதற்கு எமது பிரதேச அரச அதிகாரிகள் அக்கறை செலுத்தி கைப்பணி உற்பத்தியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க முன்வருமாறும், எனது கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்ற வசதிகளை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத் திட்டத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கைப்பணி உற்பத்திக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் ஹ{ஸைனியா வீதியில் வசிக்கும் அமீர்அலி சித்தி சுகைரா என்பவரது கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்வதற்கும், இவர் மூலம் பல பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வழங்க என்னால் முடியும் என்று வாக்குறுதி வழங்கும் நிலையில் அரச அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE