Thursday 21st of October 2021 11:03:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
கைதிகளை அச்சுறுத்த நான் முட்டாளா?  - லொஹான் ரத்வத்த தன்னிலை விளக்கம்!

கைதிகளை அச்சுறுத்த நான் முட்டாளா? - லொஹான் ரத்வத்த தன்னிலை விளக்கம்!


அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மறுத்துள்ளார்.

மது போதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நண்பர்கள் குழுவுடன் நுழைந்து கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டை அடுத்து சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து லொஹான் ரத்வத்த இராஜனாமா செய்தார். எனினும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக தொடர்கிறார்.

இந்நிலையில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், கைதிகளை அச்சுறுத்த நான் முட்டாளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கமான ஆய்வுக்காக மட்டுமே சிறைக்குச் சென்றதாகவும் அவா் கூறியுள்ளார்.

எனினும் வெலிக்கடை சிறைச்சாலை தூக்கு மேடைக்குச் சென்றதை லொஹான் ரத்வத்த ஏற்றுக்கொண்டார். அங்கும் வழக்கமான சோதனைக்காகவே சென்றதாகவும் அதன்போது மதுபோதையில் இருக்கவில்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைக்குள் என்ன நடக்கிறது? என்று விசாரித்து அறியும் பொருட்டு முன்னறிவிப்பின்றி அங்கு செல்வதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது.

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். ஜனாதிபதி மற்றும் பிரதமர் இது குறித்த உண்மையை உணர வேண்டும் எனவும் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

எனினும் லொஹான் ரத்வத்தவின் அடாவடிகளை மறைக்கும் வகையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள சி.சி.ரி.வி.கமராவில் பதிவான காட்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

லொஹான் ரத்வத்த தொடர்பில் விசாரணை நடத்தி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வலியுறுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சேனக பெரேரா கூறியுள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE