Thursday 21st of October 2021 11:58:44 AM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
10 இலட்சம் 'சினோவெக்' தடுப்பூசிகள் இலங்கைக்குச் சீனாவால் நன்கொடை!

10 இலட்சம் 'சினோவெக்' தடுப்பூசிகள் இலங்கைக்குச் சீனாவால் நன்கொடை!


இலங்கைக்கு ஒருதொகை 'சினோவெக்' கொரோனாத் தடுப்பூசிகளை நன்கொடையாய வழங்குவதற்குச் சீனா அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி 10 இலட்சம் டோஸ் சினோவெக் தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

'சினோவெக்' உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகளில் ஒன்றாகும்.

இதன்படி கடந்த ஆகஸ்ட் இறுதி வரையில் சுமார் 50 நாடுகளால் 1.8 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இதில் 1.4 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன எனவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தனது தடுப்பூசி வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்தத் தடுப்பூசிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன என்று சீனத் தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE