Wednesday 24th of April 2024 01:08:49 PM GMT

LANGUAGE - TAMIL
.
10 போ் கொல்லப்பட்ட காபூல் ஆளில்லா விமான தாக்குதல் எமது தவறே - அமெரிக்கா ஒப்புதல்!

10 போ் கொல்லப்பட்ட காபூல் ஆளில்லா விமான தாக்குதல் எமது தவறே - அமெரிக்கா ஒப்புதல்!


காபூலில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமது தரப்பில் இடம்பெற்ற தவறால் நேர்ந்தது என்பதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலில் ஏழு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். கொல்லபட்ட சுமையா என்ற குழந்தைக்கு இரண்டு வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பின்னர் இந்தக் கொடூர தாக்குதல் நடந்தது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட 20 வருட இராணுவ நடவடிக்கையின் இறுதிக் தாக்குதல்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் உள்நாட்டு கிளைக் குழுவான ஐ.எஸ்.-கே தீவிரவாதிகளை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா முன்னர் தெரிவித்தது.

ஐ.எஸ்.-கே தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அமெரிக்க உளவுத்துறை எட்டு மணி நேரம் கண்காணித்தது என்று அமெரிக்க இராணுவத்தின் கட்டளை அதிகாரி ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறினார்.

தாக்குதல் இடம்பெற்ற வளாகத்தில் ஐஎஸ்-கே உடன் தொடர்புடைய நபரின் கார் ஒன்று காணப்பட்டது. காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவின் திட்டங்கள் குறித்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலேயே அந்தக் கார் இலக்குவைக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் அந்தக் காரில் வெடிபொருட்கள் இருந்ததும் அதில் சிலர் ஏறுவதும் கண்காணிப்பில் ஈடுபட்ட ட்ரோன் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இராணுவத்தின் கட்டளை அதிகாரி ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறினார்.

எனினும் 10பொதுமக்கள் இத்தத் தாக்குதலில் கொல்லப்பட்டமை "சோகமான தவறு" என்று அவர் விவரித்தார்.

இதேவேளை, தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்காவிற்கு செல்ல விண்ணப்பித்து, விமான நிலையம் செல்வதற்காகதொலைபேசி அழைப்புக்காக காத்திருந்ததவர்கள் என அவர்களது உறவினர்கள் சா்வதேச ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அகமது நாசர் அமெரிக்கப் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் முன்பு சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அவரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா இருந்தது.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் தமது தவறு எனக் கூறி அமெரிக்கா தப்பிவிட முடியாது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு போர்க்குற்றம் என கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அமெரிக்கர்கள் தங்கள் 20 வருட ஆக்கிரமிப்பை முடித்து வெளியேறிய இறுதி நாட்களில் பதிவான கறைபடிந்த வரலாறாக இது அமைந்துள்ளது. ஆளில்லா விமானங்களின் மூலமான தாக்குதல்களின் ஆபத்தான விளைவுகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் பல்வேறு தரப்புக்கள் கண்டித்துள்ளன.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE