Wednesday 24th of April 2024 07:47:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்கா, அவுஸ்திரேலியாவிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெற்றது பிரான்ஸ்!

அமெரிக்கா, அவுஸ்திரேலியாவிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெற்றது பிரான்ஸ்!


அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ் (AUKUS) புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கும் ஒப்பந்தத்தால் அமெரிக்கா, அஸ்திரேலியாவுடனான பிரான்ஸின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்ததால் ஆத்திரமடைந்துள்ள பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து தங்கள் தூதர்களை திரும்பப்பெற்றுள்ளது

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் பிரான்சிடம் இருந்து 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் 66 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது. இதுவே பிரான்ஸை ஆத்திரமூட்டியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதியில் ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டன் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த கூட்டு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் இராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளநிலையிலேயே அதனைச் சமாளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது.

ஆக்கசின் கீழ் முதல் முயற்சியாக, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்துள்ளன

இந்த ஒப்பந்தத்தை அடுத்து 08நீர் மூழ்கி கப்பல்களை வாங்கும் வகையில் 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட 66 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அஸ்திரேலியா இரத்து செய்ததாலும், இதற்கு அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தம் காரணமானதாலும் ஆத்திரம் அடைந்தே இரு நாடுகளில் இருந்தும் தங்கள் நாட்டு தூதர்களை பிரான்ஸ் திரும்பப்பெற்றுள்ளது.

நட்பு நாடுகளாக விளங்கி வந்த பிரான்ஸ்-அமெரிக்கா-அவுஸ்திரேலியா இடையே புதிய ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை சர்வதே அளவில் முக்கியத்தும் பெற்றுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE