Thursday 28th of March 2024 04:03:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா செய்தது பெரும் நம்பிக்கைத் துரோகம் - பிரான்ஸ் கடும் சீற்றம்!

அமெரிக்கா, அவுஸ்திரேலியா செய்தது பெரும் நம்பிக்கைத் துரோகம் - பிரான்ஸ் கடும் சீற்றம்!


ஆக்கஸ் (AUKUS) பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் பொய் கூறி வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்தச் செயல் அதன் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இது நம்பிக்கைத் துரோகம் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யூஸ் லே ட்ரியன் கடும் கண்டனம் வெளியிள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ்புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கும் ஒப்பந்தத்தால் அமெரிக்கா,அவுஸ்திரேலியாவுடனான பிரான்ஸின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்ததால் ஆத்திரமடைந்துள்ள பிரான்ஸ்,அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து தங்கள் தூதர்களை திரும்பப்பெற்றுள்ளது.

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் பிரான்சிடம் இருந்து 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் 66 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது.

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டன் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த கூட்டு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு,குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் இராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளநிலையிலேயே அதனைச் சமாளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது.

ஆக்கசின் கீழ் முதல் முயற்சியாக, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்துள்ளன

இதன் மூலம் பிரான்ஸூடன் செய்துகொண்ட 56 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்துச் செய்துள்ளது. இதுவே பிரான்ஸை ஆத்திரமூட்டியுள்ளது.நட்பு நாடுகளாக விளங்கி வந்த பிரான்ஸ்-அமெரிக்கா-அவுஸ்திரேலியா இடையே புதிய ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை சர்வதே அளவில் முக்கியத்தும் பெற்றுள்ளது.

ஆத்திரமடைந்துள்ள பிரான்ஸ் அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுக்கான தனது தூதர்களை திரும்பப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்கா, அவுஸ்திரேலியாவின் செயலால் தீவிரமான நெருக்கடி உருவாகி வருவதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யூஸ் லே ட்ரியன் தெரிவித்துள்ளார்.

ஆக்கஸ் உடன்பாடு பொதுவெளியில் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் இது குறித்து பிரான்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டமையும் பிரான்ஸை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.

அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவின் வரலாற்றில் முதன்முறையாக எங்கள் தூதரை திரும்ப அழைக்கிறோம் என்பது. இது நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கை என ஜீன்-யூஸ் லே ட்ரியன் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய பிரிட்டன் குறித்தும் லே ட்ரியன் விமர்சித்துள்ளார். பிரிட்டன் சந்தர்ப்பவாத நாடு என்பதை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாகவும் அவா் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE