Tuesday 16th of April 2024 03:22:19 PM GMT

LANGUAGE - TAMIL
.
உலகின் முதல் விண்வெளிச் சுற்றுலா பயணத்தை முடித்து பயணிகள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்!

உலகின் முதல் விண்வெளிச் சுற்றுலா பயணத்தை முடித்து பயணிகள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்!


உலகின் முதல் விண்வெளிச் சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் நேற்று உள்ளூர் நேரப்படி ((23:00 GM) சனிக்கிழமை இரவு பத்திரமாக தரையிறங்கினர்.

கடந்த மூன்று நாள்களாக பூமியைச் சுற்றி வருவதற்காக ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தலா 200 மில்லியன் டொலர் கட்டணம் (இலங்கை மதிப்பில் 3,000 கோடிக்கும் அதிகம்) அறவிடப்பட்டது.

விண்வெளி வீரர்கள் அல்லாமல் சுற்றுலா நோக்கில் சராசரி மக்களும் விண்வெளிக்குச் சென்று திரும்ப முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரும் கோடீஸ்வரர்களாலேயே இது சாத்தியமாகும்.

இன்ஸ்பிரேஷன் 4 ( Inspiration4) என்ற திட்டத்தின்படி கடந்த புதன்கிழமை அமெரிக்கா - ப்ளோரிடாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் இவர்கள் புறப்பட்டனர். புளோரிடா நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவில் இருவர்கள் பூமிக்குத் திரும்பினர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் தண்ணீரில் விழுவதற்கு முன்பாக நான்கு பாரசூட்கள் மூலம் விண்கலம் விழும் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. உடனடியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் படகுககள் மூலம் நீரில் இறங்கிய விண்கலத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் இந்தக் குழுவுக்குத் தலைமையேற்று வழிநடத்திச் சென்றார்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE