Friday 29th of March 2024 04:50:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்காவில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தோர்  “பூஸ்டர்” தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி!

அமெரிக்காவில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தோர் “பூஸ்டர்” தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி!


அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கடுமையான நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மூன்றாவதாக (booster dose) பைசர் தடுப்பூசி போட அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (FDA)அனுமதி வழங்கியுள்ளது.

முதல் 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் 6 மாதத்துக்கு பின் 3-ஆவது தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இந்த வாரம் முதல் பூஸ்டர் எனப்படும் 3-ஆவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு 6 மாதங்களின் பின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரப்பட்டது.

எனினும் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் யோசனையை நிராகரித்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வயதானவர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களும் மூன்றாவது தடுப்பூசி போட அனுமதி வழங்கியுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE