Sunday 24th of October 2021 06:37:52 AM GMT

LANGUAGE - TAMIL
.
படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் - மருத்துவமனையில் அனுமதி!

படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் - மருத்துவமனையில் அனுமதி!


படப்பிடிப்பு தளத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்ததை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கும் ‘பிக்கப் டிராப்’ படத்தின் படப்பிடிப் பங்கேற்றிருந்த போதே பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மயக்கி விழுந்துள்ளார்.

‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிகை வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை படக்குழுவினர் உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE