Tuesday 16th of April 2024 04:12:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
பண்டோரா பேப்பர்ஸ் முறைகேட்டில் குறிப்பிடப்பட்ட  பாகிஸ்தானியர்கள் குறித்து விசாரணை - இம்ரான் கான்!

பண்டோரா பேப்பர்ஸ் முறைகேட்டில் குறிப்பிடப்பட்ட பாகிஸ்தானியர்கள் குறித்து விசாரணை - இம்ரான் கான்!


முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளவர்கள் மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளவர்கள் குறித்து சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து தனது அரசாங்கம் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளவர்கள் என்று பெயரிடப்பட்டவர்களில் நிதியமைச்சர் சவுகத் தாரின், அவரது குடும்பத்தினர் மற்றும் பிரதமர் இம்ரானின் நிதி மற்றும் வருவாய்க்கான முன்னாள் ஆலோசகர் வக்கார் மசூத் கான் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த ஆவணங்களில் இம்ரான் கான் வெளிநாட்டு நிறுவனங்களை வைத்திருப்பதாக எந்த தகவல்களும் இல்லை என்று சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் மூலம் சொத்துக்குவித்துள்ளவர்கள் குறித்து அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்களை நாங்கள் வரவேற்கிறோம் என பிரதமர் இம்ரான் கான் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாகிஸ்தானியர்கள் குறித்தும் எனது அரசு விசாரிக்கும். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுப்போம் எனவும் இம்ராக் கான் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE