Thursday 25th of April 2024 08:03:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஜப்பானின் புதிய பிரதமராக இன்று  பதவியேற்றார் புமியோ கிஷிடா!

ஜப்பானின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றார் புமியோ கிஷிடா!


ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா இன்று உத்தியோகபூா்வமாக பதவியேற்றார். யோஷிஹிட் சுகா பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஒரு வருடத்தில் இரண்டாவது ஜப்பானிய பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றுள்ளார்.

64 வயதான புமியோ கிஷிடா ஜப்பானின் ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் (LDP) புதிய தலைவராகத் கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேவேளை, புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள புமியோ கிஷிடா, ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் பிரதிநிதிகள் சபையை கலைக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து இவ்வாண்டு நவம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தெரியவருகிறது.

ஜப்பானில் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், ஏழை - பணக்காரா்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும் தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என புமியோ கிஷிடா உறுதியளித்துள்ளார்.

அத்துடன், கொவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவ 10இலட்சம் கோடி யென் மதிப்புள்ள ஒரு பொருளாதார ஊக்குவிப்பு உதவித் திட்டம் தயாராக உள்ளதாகவும் அவா் அறிவித்துள்ளார்.

பிரதமர் புமியோ கிஷிடா பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவை இன்று அறிவிக்கப்படவுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE