Thursday 25th of April 2024 11:16:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கனடிய தேசிய நாளைக் கனடியத் தமிழர் பேரவை கடைப்பிடித்தது!

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கனடிய தேசிய நாளைக் கனடியத் தமிழர் பேரவை கடைப்பிடித்தது!


கனடியத் தமிழர் பேரவை (CTC) மற்றும் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்கள் செப்ரெம்பர் 30 ஆம் தேதி கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முதல் தேசிய நாளையும், செம்மஞ்சள் ஆடை நாளையும் முன்னிட்டு கிராண்ட் ஆற்றங்கரையில் பழங்குடிச் சமூகத்தோடு இணைந்திருந்தனர். கனடிய அரசுகளால் பழங்குடியின மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடுகள் காரணமாக அந்த மக்கள் வலிகளையும், அநீதிகளையும் இன்றும் தாங்கி வருகின்றனர்.

பதின்மூன்றாவது வருடாந்த கனடியத் தமிழர் நிதிசேர் நடையை நடத்திய கனடியத் தமிழர் பேரவை 20,000 க்கும் மேற்பட்ட கனடிய டொலர்களைத் திரட்டியிருந்தது. இந்த ஆண்டுக்கான நிதிசேர் நடையில் சேகரிக்கப்பட்ட நிதி கோர்ட் டவுனி & சேனி வென்ஜாக் நிதியத்துக்கு (DWF) வழங்கப்படுகிறது. பழங்குடி மக்களுக்கும் அவர்கள் அல்லாத சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை DWF நிதியம் ஊக்குவிக்கிறது. பூர்வகுடி மக்களின் உண்மையான வரலாற்றையும் மற்றும் வதிவிடப் பள்ளிகள் என்ற முறைமையினால் தற்போது எழுந்துள்ள தாக்கம் குறித்த கல்வியையும் கனடியர்கள் பெறுவதற்காக DWF நிதியம் உழைத்து வருகிறது. கனடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் கிராண்ட் ஆற்றங்கரையின் இருப்பிடமொன்றில் நிதிசேர் நடையிலிருந்து பெறப்பட்ட இருபதினாயிரம் கனடிய டொலர்களுக்கான காசோலையை வழங்கியிருந்தனர். கிராண்ட் ஆற்றங்கரையில் அமைந்துள்ள Six Nations of the Grand River பிராந்தியம் கனடாவில் அதிக தொகையில் பூர்வகுடி மக்கள் வாழும் பழங்குடித் தேசமாகும்.

கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்னாள் இடைக்கால நிர்வாக இயக்கினரான “பொப் வாற்ஸ்”, DWF நிதியம் சார்பாக காசோலையைப் பெற்றுக்கொண்டார். "இது உண்மை மற்றும் நல்லிணக்கம் உருவாக்கப்படுவதற்கான உண்மையான உறுதியான உதாரணம். நாங்கள் ஒருவருக்கொருவர் இந்த உறவுகளை உருவாக்கியதில் மகிழ்ச்சியடைகிறோம் ”என இறுதியுரையின் போது பொப் வாற்ஸ் கூறினார்.

இந்த நிகழ்வின் போது எமது உறுப்பினர்கள் ஓஷ்வெக்கன் பிரதேசம், சீஃப்ஸ்வூட் தேசிய வரலாற்று அருங்காட்சியகம், கெய்லோர்ட் பவ்லெஸ் அரங்கம், மற்றும் கனடாவின் முதலாவது வதிவிடப் பாடசாலையான மொஹாக் கல்லூரி (தற்போது வூட்லான்ட் கலாச்சார மையம் என அழைக்கப்படுகிறது) ஆகியவற்றுக்கும் வருகை தந்திருந்தார்கள்.

கனடாவின் பழங்குடிச் சிறார்களுக்கான முதலாவது வதிவிடப் பாடசாலையான மொஹாக் கல்லூரி 1828 முதல் 1970 வரை ஒன்ராறியோ மாகாணத்தின் பிரான்ற்போர்ட்டில் இயங்கி வந்திருக்கின்றது. இது Six Nations பழங்குடிச் சமூகச் சிறார்களுக்கான உறைவிடப் பள்ளியாகவும், ஒன்ராறியோ மற்றும் கியூபெக் முழுவதும் உள்ள மற்றைய பழங்குடிச் சமூகச் சிறார்களுக்காகவும் இயங்கி வந்துள்ளது. பூர்வகுடி மக்களின் குழந்தைகளை ஐரோப்பிய கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, பழங்குடிப் பெற்றோரிடமிருந்து பழங்குடிக் குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு வருகிற கலாச்சார பண்பாட்டுத் தொடர்ச்சியை அழிக்கும்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE