Thursday 25th of April 2024 09:17:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
வெப்ப கால உயிரிழப்புக்கள்; கனேடிய அரசு மீது  மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

வெப்ப கால உயிரிழப்புக்கள்; கனேடிய அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!


கனடா மேற்கு மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த கோடை வெப்பத்தில் நூற்றுக்கணக்கான முதியவர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள நபர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களைப் பாதுகாக்க கனேடிய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) விமர்சித்துள்ளது.

காலநிலை பேரழிவுகள் உணரப்படுவதற்கு முன்னர் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான வளங்களை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று செய்வாய்க்கிழமை விடுத்த அறிக்கையில் கனேடிய அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத இறுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் கனேடிய வரலாற்றில் இல்லாத உயர்ந்த வெப்பநிலையை அனுபவித்தது. இக்காலப்பகுதியில் அங்கு 49.6C (121.2F) வெப்ப நிலை பதிவானது. அந்தச் சூழ்நிலையில் வெப்பநிலையில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகள் ஏற்படுத்தப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதுவே அதிக பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்துள்ளது.

கடும் வெப்பம் 569 இறப்புகளுக்கு காரணமாக அமைந்ததாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவா்களில் அதிகமானவர்கள் முதியவர்களாவர்.

கனடாவைச் சேர்ந்த 31 நபர்களுடனான தொலைதூர நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் அதிக வெப்பத்தால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் பிரிவினராக உள்ளனர். எனினும் அவா்கள் உரியவாறு கையாளப்படவில்லை என மாற்று வலுவடையவர்கள் உரிமைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் எமினா செரிமோவிக் கூறினார்.

மீண்டும் பேரழிவு ஏற்படும் முன் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களைப் பாதுகாக்க கனேடிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளார்.

சில பகுதிகளில் வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில் குளிரூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் பலர் அவற்றை அணுக முடியவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE