Friday 29th of March 2024 06:22:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
உரத்தினை விற்பனை செய்யும் ஒருசிலரின் நடவடிக்கைக்கு விவசாயிகள் விசனம்!

உரத்தினை விற்பனை செய்யும் ஒருசிலரின் நடவடிக்கைக்கு விவசாயிகள் விசனம்!


08.10.21 இன்று காலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உரத்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் அதிகாலை வேளையில் கமநல சேவை நிலையத்தின் முன்னால் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான மேட்டுநில பயிற்செய்கையாளர்களுக்கான அரச கட்டுப்பாட்டு விலையுடனான உரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை உரத்தினை பெறுவதற்காக வரிசையில் விவசாயிகள் காத்திருந்த வேளை உரம் இல்லை என அறிவிப்பால் உரத்தினை பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் கவனயீர்ப்பு ஒன்றினை வெளிப்படுத்தியுள்ளர்கள்.

விவசாயிகள் ஒன்று கூடியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினர் வருகைதந்து விவாசாயிகளிடம் பிரச்சினiயினை கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றுள்ளார்கள்.

சரியான முறையில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்கள்.

ஒரு விவசாயிற்கு ஒரு பையூரியா உள்ளிட்ட ஏனைய உரங்கள் 1500 ரூபா விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் இதனை பெற்றுக்கொள்வதற்கா மக்கள் அதிகாலை முதல் வரிசையில் நின்றுபோதும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

உரத்தினை உண்மையான விவசாயிக்கு சென்றடையவில்லை சந்தியில் வாகனம் நிக்கும் பசளையினை எடுக்கின்றார்கள் அங்கு 6ஆயிரம் ரூபாவிற்கு கொடுக்கின்றார்கள் வெளியில் 10ஆயிரம் ரூபாவிற்கு விக்கின்றார்கள். இதனை மேல் அதிகாரிகளுக்கு சொல்லமுடியாது அவ்வாறு சொன்னால் பசளை எடுக்கவரமுடியாது.

கிராம சேவையாளரின் விவசாய செய்கை தொடர்பான ஒப்பம், மற்றும் விவசாய போதனசாரியரின் பரிந்துரை,கமக்கார அமைப்பின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த பசளை வழங்கப்பட்டுவந்துள்ளது.

ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தில் உள்ள இரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு முடிந்துள்ளன இன்னும் உரத்திற்கான தேவை உள்ளது சேதன பசளைகள் இருப்பதாகவும் இனி உரம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE