Sunday 24th of October 2021 06:01:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
பொருளாதார, மனிதபிமான நெருக்கடிளில் இருந்து ஆப்கான் மக்கள் மீள உதவுமாறு ஐ.நா. அழைப்பு!

பொருளாதார, மனிதபிமான நெருக்கடிளில் இருந்து ஆப்கான் மக்கள் மீள உதவுமாறு ஐ.நா. அழைப்பு!


ஆப்கானிஸ்தானில் வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் என எச்சரித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், அங்கு பொருளாதார நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய குடெரெஸ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பாதுகாப்கப்படும் என ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

பெண்கள், சிறுமிகளின் உரிமைகளை ஏற்க மறுக்கும் தலிபான்களில் செயற்பாடு அவர்களின் கனவுகளை சிதைக்கும். பெண்கள் வேலைக்குச் செல்வதை தலிபான்கள் தடுத்தால் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது எனவும் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக நீடித்த அமெரிக்காவின் இராணுவத் தலையீடு முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு ஏற்பட்டுவரும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை தணிப்பதற்கான அவசரத் தேவையை அவரது கருத்துக்கள் கோடிட்டுக் காட்டின.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் மத்திய வங்கி சொத்துகளில் பில்லியன் கணக்கானவை முடக்கப்பட்டுள்ளன. அத்துடன், சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதிக்கான அணுகலை நிறுத்திவிட்டன. இருப்பினும் மனிதாபிமான உதவிகள் தொடர்கின்றன.

வங்கிகளில் பணம் இல்லாததால் ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அத்துடன், உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

இந்த நெருக்கடி குறைந்தது 18 மில்லியன் மக்களை பாதிக்கிறது. அதாவது பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குட்டரெஸ் கூறினார்.

ஆப்கான் பொருளாதாரத்தை சீரமைக்கவும் மனிதாபிமான நெருக்கடிகளைத் தவிர்க்கவும் ஏதுவாக அங்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு உலக நாடுகளை வலியுறுத்துகிறேன் எனவும் அவா் தெரிவித்தார்.

அத்துடன், ஆப்கான் அரசாங்கத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கும் வகையிலான இராஜதந்திர நடவடிக்கைகளை தலிபான்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.

பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதுள்ள ஒரு வழி ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான உதவி நிறுவனங்கள் ஊடாக நேரடியாக மக்களுக்கு பணம் சென்று சேருவதை உறுதிப்படுத்துவதுதான் எனவும் ஐ.நா. பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

ஆப்கானியர்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக உலக வங்கி ஒரு விசேட நம்பிக்கை நிதியத்தை உருவாக்கலாம். அதன் மூலமாக உதவ முடியும் எனவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் சுட்டிக்காட்டினார்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE