Tuesday 16th of April 2024 06:04:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
2 வயது முதல் 18 வயது வரையானோருக்கு  கோவேக்ஸின் தடுப்பூசியை போட பரிந்துரை!

2 வயது முதல் 18 வயது வரையானோருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியை போட பரிந்துரை!


கோவேக்ஸின் தடுப்பூசியை 2 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர கால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருத்துவ நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.

2 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்காக கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதாராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசி மொத்தம் 3 கட்ட பரிசோதனைகளில் 2 கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்துள்ளது. பரிசோதனை முடிவுகளுடன் இந்தத் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கேட்டு இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் இந்த மாதத் தொடக்கத்தில் விண்ணப்பித்திருந்தது.

அந்த நிறுவனம் சமா்ப்பித்திருந்த பரிசோதனை அறிக்கை விவரங்களை மருத்துவ நிபுணா் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்தது. அதைத் தொடா்ந்து, அந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில், கோவேக்ஸின் தடுப்பூசியை சில நிபந்தனைகளுடன் சிறாா்களுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த மருத்துவ நிபுணா் குழு பரிந்துரை செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் குழு தனது பரிந்துரைகளை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும் அனுப்பி வைத்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE