Friday 29th of March 2024 05:43:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதுவது யார்? டெல்லி - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதுவது யார்? டெல்லி - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!


ஐ.பி.எல். ரீ-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போவது யார் என்ற ஆட்டத்தில் டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “குவாலிபயர்2” ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடக்கிறது.

இதில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி தொடரில் டெல்லி அணி சிறப்பாக ஆடி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-ல் வெற்றி பெற்றது. 4 லீக் ஆட்டத்தில் தோற்றது. “குவாலியர் 1” போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியவில்லை.

கொல்கத்தாவை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல். இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி இருக்கிறது.

கொல்கத்தா அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்தது.

எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியிருந்ததால், அந்த அணி டெல்லியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE