Tuesday 23rd of April 2024 08:57:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
செயார்மன் வெற்றி கிண்ணம் எனும் பெயரில் உதைபந்தாட்டத்தை சீரழிக்கின்றனரா? அருணகிரிநாதன் நாகராஜன்!

செயார்மன் வெற்றி கிண்ணம் எனும் பெயரில் உதைபந்தாட்டத்தை சீரழிக்கின்றனரா? அருணகிரிநாதன் நாகராஜன்!


வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கங்களிலுள்ள கழகங்களை சீரழிக்கின்றதற்கான ஒரு செயற்பாட்டை நகரசபை தலைவர் மேற்கொள்கின்றார் என்ற குற்றச்சாட்டினை வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும் , வடமாகாண உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உப பொருளாளருமாகிய அருணகிரிநாதன் நாகராஜன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இவ் விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபை தலைவரால் கிரிக்கெட் சுற்றுப்போட்டி மற்றும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி செயார்மன் வெற்றி கிண்ணம் எனும் பெயரில் நடாத்தப்பட இருக்கின்றது. குறித்த போட்டி ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் கழகங்களையும், வீரர்களையும் அனுமதிக்குமாறு கோரி கடிதம் மூலம் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் உதைபந்தாட்ட சங்கத்திடம் அனுமதி கேட்கவில்லை. மாறாக கழகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய அனுமதியை உதைபந்தாட்ட சங்கத்திடம் கேட்கும் பட்சத்தில் நாங்கள் அனுமதியை வழங்க தயாராக இருக்கின்றோம்.

கிரிக்கெட் சங்கத்தின் நடைமுறைகளை பின்பற்றி அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்திடம் உரிய முறையில் அனுமதி கோரப்படாமல் எமது கழகங்களிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உதைபந்தாட்ட சங்கத்தின் நடைமுறைகளை பின்பற்றாது போட்டிக்கான அனுமதி கோராதது ஒரு சங்கத்தினை அனுமதித்தும் இன்னோர் சங்கத்தினை புறக்கணிப்பதுமான செயற்பாடு வவுனியா மாவட்டத்திலுள்ள உதைபந்தாட்ட சங்கத்திலுள்ள கழகங்களை சீரழிக்கின்றதற்கான ஒரு செயற்பாட்டை தான் நகரசபை தலைவர் செய்கின்றார்.

வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட வீரர்களினதும், கழகங்களினதும் நலன் கருதி நடக்க நாம் தயாராக இருக்கின்றோம். அதற்குரிய வகையில் அனுமதியை கேட்கும் போது உடனடியாக வழங்குவோம். என்று மேலும் தெரிவித்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE