Sunday 24th of October 2021 06:37:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
அந்நிய  செலாவணி இருப்பு நிலை குறித்து கவலைகொள்ள தேவையில்லை - அஜித் நிவாட் கப்ரால்!

அந்நிய செலாவணி இருப்பு நிலை குறித்து கவலைகொள்ள தேவையில்லை - அஜித் நிவாட் கப்ரால்!


அந்நிய செலாவணி இருப்பு நிலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் தவறான கருத்துக்களால் தேவையற்ற கவலை கொள்ளத் தேவையில்லை. என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நெருக்கடியான இந்த காலப்பகுதியில் இது கவலைக்குரிதாக இருந்த போதிலும் மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிதி நடவடிக்கையின் மூலம் அந்நிய செலாவணி இருப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியில் வெளிநாட்டு சொத்து மறை பெறுமதி தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜூலை மாதத்தில் 982 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டட மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்து ஆகஸ்ட் மாதத்தில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்ததாகவும் தெரிவித்தார்.

நாட்டின் வரலாற்றில் 15 முறை இவ்வாறான மறைப் பெறுமதியை காண்பித்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. எனினும், அது தற்காலிகமானது. கொடுக்கல் வாங்கல் மூலம் இதன் பெறுமதி மாற்றமடையலாம். அந்த நிதி கொடுக்கல் வாங்கலை அடுத்த வாரம் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்போது மொத்த வெளிநாட்டு செலவாணி இருப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். சீன மக்கள் வங்கியின் பேரம் பேசி மாற்றிக் கொள்ள்ப்பட்ட வசதியிலான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் இது உள்ளடக்கியதாகும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE