Wednesday 24th of April 2024 11:50:47 PM GMT

LANGUAGE - TAMIL
-
தும்பாலைசோலை கிராமத்திற்கு  மின்சார வசதியினை விரைவில் பெற்றுதர நடவடிக்கை!

தும்பாலைசோலை கிராமத்திற்கு மின்சார வசதியினை விரைவில் பெற்றுதர நடவடிக்கை!


மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட தும்பாலைச்சோலை கிராமத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் திட்டமிடப்படாத 25 வீடுகளை கொண்ட மீள்குடியேற்றத்தில் உள்ள மக்கள் எந்தவித அடிப்படை வசதியுமின்றி அங்கு காட்டுயானை உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக அப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானை அப்பகுதியில் அவர்களது வேலிகளை உடைத்தும் அங்குள்ள பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியும் வருவதனால் அப்பகுதி மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமது குழந்தைகளை காப்பாற்றும் முகமாக பிரதான வீதியிலிருந்து மின்சார இணைப்பு பெற்று இருந்துள்ளனர்.

இன்று அதிகாலை சட்டவிரோத மின்னினைப்பு பெற்றதன் காரணமாக வீட்டுதிட்ட பயனாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த நல்லாட்சியில் சகல அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக வாக்குறுதியளித்து தங்களை இப் பகுதியில் மீள் குடியேற்றியதாகவும் ஆனாலும் அவை உரிய காலத்தில் கிடைக்காமையால் அப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுதருமாறு வீட்டுதிட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் இவ் விடயத்தை கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட தையடுத்து அவரது பணிப்பிற்கமைவாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் அப் பகுதி மக்களுக்கு மின்சார சபை மூலமாக மின்னினைப்பு பெற்றுதர நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE