Friday 29th of March 2024 07:43:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
20 ஓவர் உலகக்கிண்ண போட்டி; அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் ஷஹிப் அல் ஹசன்!

20 ஓவர் உலகக்கிண்ண போட்டி; அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் ஷஹிப் அல் ஹசன்!


20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் அப்ரிடி வசமிருந்த சாதனையை ஷஹிப் அல் ஹசன் முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷகிட் அப்ரிடி 20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் 39 விக்கெட் (34 ஆட்டங்கள்) வீழ்த்தியிருந்தமையே அதிகூடிய விக்கெட் சாதனையாக இருந்துவந்தது.

ரீ-20 உலகக் கிண்ணம் 2021 தொடரின் சுற்று-12 போட்டியில் நேற்று இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதின.

இலங்கை அணிக்கு எதிரான இப் போட்டியில் ஷஹிப் அல் ஹசன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதையடுத்து ரீ-20 உலகக் கிண்ண போட்டிகளில் ஷஹிப் அல் ஹசன் வீழ்த்திய விக்கெட்டுக்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இதுவரை ஷகிட் அப்ரிடி வசமிருந்த சாதனையை ஷஹிப் அல் ஹசன் முறியடித்துள்ளார்.

29 ரீ-20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் ரீ-20 உலகக் கிண்ண போட்டியில் அதிகூடிய விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ஷஹிப் அல் ஹசன்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE