Tuesday 23rd of April 2024 12:07:49 PM GMT

LANGUAGE - TAMIL
-
இருபத்துக்கு இருபது உலகக்கிண்ணம்; இலங்கையை வெற்றிகொண்டது ஆஸி.!

இருபத்துக்கு இருபது உலகக்கிண்ணம்; இலங்கையை வெற்றிகொண்டது ஆஸி.!


அபுதாபியில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண இருபத்துக்கு 20 கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியை 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் பெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்த து.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலன்க 35 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

155 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 65 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE