Monday 29th of November 2021 05:20:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!


உலகக்கிண்ணம் இருபத்துக்கு 20 போட்டித் தொடரின் 25 ஆவது போட்டியில் இலங்கை அணியை தென்னாபிரிக்க அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸங்க 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் டப்ரைஸ் ஷம்சி 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

143 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 19.5 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றியினைத் தனதாக்கியது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE