Wednesday 24th of April 2024 09:03:21 PM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
கிளிநொச்சியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது!

கிளிநொச்சியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது!


போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றிவளைப்பட்டதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின்போது போலியான 15 முன் இலக்கத் தகடுகளும், போலியான 28 பின் இலக்கத் தகடுகளும், அரச முத்திரையுடன் கூடிய 363 ஸ்டிக்கர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் உதயநகர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனக் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபர் இன்று (02) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE