Monday 29th of November 2021 06:39:42 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது இந்தியா; நியூசிலாந்து - ஆப்கான் போட்டி முடிவுக்காக காத்திருப்பு!

ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது இந்தியா; நியூசிலாந்து - ஆப்கான் போட்டி முடிவுக்காக காத்திருப்பு!


ரீ-20 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்கொட்லாந்தை வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை இந்திய அணி ஓரளவு தக்கவைத்துள்ளது.

ரீ-20 உலகக்கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற சூப்பர்-12 சுற்று போட்டியில் இந்தியா - ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட ஸ்கொட்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

ஜார்ஜ் முன்சி அதிகபட்சமாக 24 ஓட்டங்களை ஸ்கொட்லாந்து அணி சார்பில் பெற்றுக் கொண்டார்.

மொஹமட் சமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர். ஜஷ்பிரிட் பும்ரா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 86 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ஓட்டங்களையும், கே.எல் ராஹுல் 19 பந்துகளில் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகைளை பெற்று குழு-2 இல் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

குழு-2 இல் பாகிஸ்தான் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் 2வது அணியாக நியூசிலாந்து வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு நேரடியாக அற்றுப் போயிருப்பினும் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியின் முடிவுக்காக இந்திய அணியும், இந்திய ரசிகர்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறும் அதேவேளை ஆப்கானிஸ்தான், இந்திய அணிகளை சூப்பர்-12 சுற்றோடு வெளியேற்றிவிடும்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE