Tuesday 23rd of April 2024 10:44:03 PM GMT

LANGUAGE - TAMIL
.
ரீ-20 உலகக் கிண்ணம்; இந்தியாவின் கனவை கலைத்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது நியூசிலாந்து!

ரீ-20 உலகக் கிண்ணம்; இந்தியாவின் கனவை கலைத்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது நியூசிலாந்து!


ரீ-20 உலகக் கிண்ணம்-2021 தொடரின் சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நியூசிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் அரையிறுதி கனவு கலைந்துள்ளது.

சூப்பர்-12 சுற்றின் நேற்றைய ஆட்மொன்றில் குழு-02 இல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நியூசிலாந்து அணி வீரர்களின் துல்லியமா பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

19 ஓட்டங்களில் 3 விக்கெட்டை இழந்த ஆப்கான் 56 ஓட்டங்களை எடுத்த நிலையில் 4வது விக்கெட்டையும் இழந்தது.

ஆப்கான் அணி சார்பில் அதிகபட்சமாக நஜிபுல்லாஹ் ஷட்ரன் 73 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் - 3, ரிம் சௌதே - 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

125 என்ற சுலப இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நியூச்லாந்து அணி 18.1 ஓவர்களில் 2விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வில்லியம்சன் - 40, டெவோன் கொன்வேய் - 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது இருந்தனர்.

இதன் மூலம் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அணி குழு-2 இல் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால் குழு - 2 இல் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE