Wednesday 24th of April 2024 07:30:20 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து நியூசிலாந்தில்  இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆா்ப்பாட்டம்!

கொவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து நியூசிலாந்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆா்ப்பாட்டம்!


அரசின் கட்டாய தடுப்பூசி ஆணை மற்றும் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூசிலாந்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி சென்ற நிலையில் பாராளுமன்ற சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத்தின் இரண்டு நுழைவாயில்களைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டு எதிர்ப்பாளர்கள் நுழைய முடியாதவாறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் முககவசம் அணியாத போராட்டக்காரர்கள் மத்திய வெலிங்டன் வழியாக அணிவகுத்து பாராளுமன்றத்திற்கு வெளியே கூடினர்.

ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசி கட்டாய ஆணைக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. அத்துடன், நாங்கள் ஆய்வக எலிகள் அல்ல என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்தும், ஊடகங்கள் தொற்று நோய் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பில் பொய் தகவல்களை வெளியிடுவதாகவும் அவா்கள் கருத்து வெளியிட்டனர்.

எனது சுய விருப்பின்றி தடுப்பூசி போடுமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என பாராளுமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த எதிர்ப்பாளர் ஒருவர் உரக்கக் கத்தினார்.

வேகமகப் பரவக் கூடிய கொரோனா வைரஸ் டெல்டா திரிபைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த ஆண்டு நியூசிலாந்தில் சமூக முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அத்துடன், கட்டாய தடுப்பூசி கொள்கைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதார துறையினர், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு தடுப்பூசி கட்டாயம் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த மாதம் கூறினார். இது தனி மனித சுதந்திரத்தை மீறும் செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இன்றைய போராட்டம் குறித்து பாராளுமன்றத்திற்குள் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்டெர்ன் "போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நியூசிலாந்து மக்களில் பெரும்பகுதியினரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோயை சிறப்பாகக் கையாண்டு கட்டுப்படுத்திய நாடுகளில் முன்னணி வரிசையில் நியூசிலாந்து உள்ளது. அங்கு இதுவரை 8,000 க்கும்தொற்று நோயாளர்களே பதிவாகியுள்ளனர். அத்துடன், 32 கொரோனா இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

நாட்டில் தடுப்பூசி பெறத் தகுதியான மக்களில் 80 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE