Wednesday 24th of April 2024 06:30:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
கனடாவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர் தடுப்பூசிக்கு நாளை அங்கீகாரம்?

கனடாவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர் தடுப்பூசிக்கு நாளை அங்கீகாரம்?


கனடாவில் 5 முதல் 11 வரையான சிறுவர்களுக்கு பைசர் கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்புதலை ஹெல்த் கனடா நாளை வெள்ளிக்கிழமை வழங்கும் என சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போட ஏதுவாக வரவிருக்கும் நாட்களில் சுமார் 30 இலட்சம் பைசர் கொவிட் 19 தடுப்பூசிகள் கனடா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்டு வருகின்றபோதும் 11 மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கான தடுப்பூசிக்கு ஹெல்த் கனடா இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

இதனால் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொண்டு வருவதாக கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், தடுப்பூசி போடப்படாத சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளானால் அவர்கள் ஊடாக வீட்டில் உள்ள பெரியவர்களும் ஆபத்தை எதிர்கொள்ள நேரும் என அச்சம் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட ஹெல்த் கனடா நாளை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்காவில் ஏற்கனவே 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பைசர் ஒரு தடுப்பூசி சிறுவர்கள் மத்தியில் வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதாக தெரியவந்துள்ளது.

ஒற்றைத் தடுப்பூசி சிறுவர்களிடையே 91.4 வீதம் பாதுகாப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE