Monday 29th of November 2021 06:19:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெள்ளப்பெருக்கால் பேரழிவு;  அவசர நிலை பிரகடணம் - மத்திய மீட்புப் படை விரைகிறது!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெள்ளப்பெருக்கால் பேரழிவு; அவசர நிலை பிரகடணம் - மத்திய மீட்புப் படை விரைகிறது!


கனடா - பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாகாணத்தில் நேற்று புதன்கிழமை அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல மலையோர நகரங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்தங்களால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

மாகாணத்தில் சுமார் 18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தப் பேரழிவுகள் கடந்த சில நூற்றாண்டுகளில் காணாதது என பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் ஜோன் ஹோர்கன் கூறினார்.

தடைப்பட்ட பாதைகளை சீர் செய்து அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை உறுதி செய்வோம் எனவும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜோன் ஹோர்கன் தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் வான்கூவரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய துறைமுகத்திற்கான அணுகலையும் துண்டித்தது. இதனால் ஏற்கனவே சீர்கெட்டுள்ள உலக விநியோகச் சங்கிலியில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ளது பயங்கரமான பேரழிவு என தெரிவித்துள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாகாணத்தின் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு மத்திய அரசாங்கம் முழுமையான உதவிகளை வழங்கும் என அறிவித்தார்.

மீட்புக்கு உதவுவதற்காக நூற்றுக்கணக்கான விமானப்படை வீரர்களை ஒட்டாவா அனுப்பவுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ கூறினார்.

இதேவேளை, வான்கூவரின் வடகிழக்கில் உள்ள துலாமீனில் 400 பேர் வரை சிக்கியுள்ளனர். அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது என அவசர நடவடிக்கைகை பிரிவு செய்தித் தொடர்பாளர் எரிக் தோம்சன் கூறினார். இந்தப் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு உள்ளிட்ட அதியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தார்.

வான்கூவருக்கு கிழக்கே 100 மைல்கள் தொலைவில் உள்ள ஹோப்பில் உள்ள சுமார் 6,000 குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இடம்பெயரவேண்டிய நிலையில் உள்ளதாக அங்குள்ள பாதிரியார் ஜெஃப் குன் தெரிவித்தார். அவர்கள் பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எதிர்பார்த்துள்ளதாகவும் அவா் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE