Monday 29th of November 2021 06:46:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக  ஒன்றரை மணி நேரம் பதவி வகித்த கமலா ஹரிஸ்!

அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக ஒன்றரை மணி நேரம் பதவி வகித்த கமலா ஹரிஸ்!


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று வெள்ளிக்கிழமை சிறிய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவா் மயக்கத்தில் இருந்த ஒன்றரை மணி நேரங்கள் ஜனாதிபதிக்கான அதிகாரம் துணை ஜனாதிபதி கமலா ஹரஸூக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பு தற்காலிகமாக கமலா ஹாரிஸூக்கு வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வமான கடிதம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு நேற்றுக் காலை அமெரிக்க நேரப்படி 10:10க்கு அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.

57 வயதான கமலா ஹரிஸ் 85 நிமிடங்கள் அமெரிக்க ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தை தன்வசம் வைத்திருந்தார்.

குறைந்த நேரம் அதிகாரத்தில் இருந்தாலும் கூட இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதிக்கான அதிகாரத்துடன் இருந்த முதல் பெண் என்ற பெருமை கமலா ஹரிஸூக்கு கிடைத்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பைடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவரால் தனது கடமைகளைச் செய்ய முடியும் என்றும் தலைமை மருத்துவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதன் பின்னரே பைடன் வசம் மீண்டும் ஜனாதிபதி அதிகாரம் கைமாறியது.

வொஷிங்டன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வால்டர் ரீட் தேசிய ,ராணுவ மருத்துவ மையத்திற்கு நேற்று சென்ற பைடன், ஜனாதிபதி மேற்கொள்ளும் உடல் பரிசோதனையை முதன்முறையாக மேற்கொண்டார். இதன்போதே அவருக்கு மயக்க மருந்து அளித்து சிகிச்சை வழங்கப்பட்டது.

பின்னர் காலை 11:35 மணிக்கு ஹரிஸ் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை அலுவலர் ரான் க்ளெய்னிடம் பேசிவிட்டு தனது பொறுப்புகளை மீண்டும் பைடன் ஏற்று கொண்டார்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE