Saturday 20th of April 2024 10:50:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
திமுத் கருணாரத்ன அடித்த பந்து தாக்கி  மேற்கிந்திய அணி வீரர் காயம்!

திமுத் கருணாரத்ன அடித்த பந்து தாக்கி மேற்கிந்திய அணி வீரர் காயம்!


இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது முன்களத் தடுப்பில் ஈடுபட்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் ஜெரமி சொலோசனோ அணிந்திருந்த ஹெல்மெட்டில் பந்து பலமாகத் தாக்கி அவர் காயமடைந்தார்.

இலங்கை அணி வீரர் திமுத் கருணாரத்ன வேகமாக அடித்த பந்து ஜெரமி சொலோசனோ ஹெல்மெட்டில் பலமாகத் தாக்கியதை அடுத்து அவர் உடனடியாக மைதானத்துக்கு வெளியே தூக்கிச் செல்லப்பட்டு பின்னர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். .

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலவாது டெஸ்ட் போட்டி இன்று காலி விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையிலேயே அறிமுக வீரர் ஜெரமி சொலோசனோ பந்து தாக்கி காயமடைந்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE