Monday 29th of November 2021 06:25:19 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை - மேற்கிந்திய தீவுகள் இடையிலான 3வது நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது!

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் இடையிலான 3வது நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது!


இலங்கை - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட்டின் 3ம் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.

இரு அணிகளும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இலங்கை அணியின் 386 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நேற்றைய மூன்றாம் நாள் தேநீர் இடைவெளிக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை எடுத்திருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் இலங்கையை விட 162 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பகிர்ந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சார்பில் கைல் மேயர்ஸ் 62 பந்துகளில் 45 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

சீரற்ற காலநிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டபோது துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஜோசுவா டி சில்வா 70 பந்துகளை எதிர்கொண்டு 11 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE