Thursday 18th of April 2024 10:29:22 PM GMT

LANGUAGE - TAMIL
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றி!


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

தனஞ்சய டி சில்வா 65 ஒட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 56 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தினேஷ் சந்திமால் 45 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ரோஸ்டன் சேஸ் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 156 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

பந்துவீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 4 விக்கெட்களையும், ரமேஷ் மென்டிஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் போட்டியை கைவிட்டுள்ளது.

அதனடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லசித் அம்புல்தெனிய 5 விக்கெட்களையும் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE