Wednesday 24th of April 2024 06:00:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
உலக உணவுத் திட்டத்தின் உயர்மட்டக் குழுவினர் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்கு களவிஜயம்!

உலக உணவுத் திட்டத்தின் உயர்மட்டக் குழுவினர் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்கு களவிஜயம்!


முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் அவர்களின் தலைமையில் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அப்துல்ராகிம் சித்திக் மற்றும் பிரதிப் பணிப்பாளர் அன்றியா பிரார்டொ, அரச உலக உணவுத்திட்ட இணைப்பாளர் முஸ்தபா நியமத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் துணுக்காய் பிரதேச செயலர்பிரிவில் உலக உணவுத்திட்டத்தின் உதவியுடன் அமுல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை நேரடியாக நேற்று (25) பார்வையிட்டனர்.

இதன்போது WFP இன் R5n செயற்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட ஆலம்குளம் தொடர்பிலான பயன்கள் கிராமிய நன்னீர் மீன்பிடி அமைப்பிற்கான உதவிகளின் மூலம் கிடைக்கப்பெற்ற பயன்களை கமக்கார அமைப்பிடம் கேட்டறிந்துடன் தென்னியன்குளம் கிராம மட்ட விவசாயிகள் மற்றும் நன்னீர் மீனவர்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சனைகளை கேட்டறிந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் கமநலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பரணிதரன், துணுக்காய் பிரதேசசெயலாளர் லதுமீரா, மாவட்ட உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரி ஜெயபவாணி கணேசமூர்த்தி, NAQDA நிறுவனப் பணியாளர்கள், மாவட்ட உலக உணவுத்திட்டத்தின் உப அலுவலக அலுவலகர்கள் மற்றும் பணியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE