Tuesday 16th of April 2024 09:00:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக யாழ். மாநகர சபையில் சந்திப்பு!

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக யாழ். மாநகர சபையில் சந்திப்பு!


ஆறுமுகநாவலரின் 200 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளில் ஒன்றான நாவலர் கலாசார மண்டபத்தைப் புனரமைத்தலும் அங்கு நாவலர் பெருமானின் பணிகளை முன்னெடுத்தலும் என்ற செயற்றிட்டத்துக்கு அமைவாக, நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான சந்திப்பு யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்றது.

இந்து சமய, கலாசார அலுவவல்கள் திணைக்களத்துக்குச் சொந்தமான நாவலர் கலாசார மண்டபத்தில் நாவலர் பணிகளை யாழ். மாநகர சபையோடு இணைந்து செயற்படுத்தும் வகையில் சுமுகமான முறையிலே இடம்பெற்ற இந்தச் சந்திப்பு நிகழ்விலே, பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திரக்குருக்கள் பாபு சர்மா, பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம், யாழ். மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் தயானந்தராஜா, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர், விடைக்கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு நிகழ்விலே இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனால் நாவலர் கலாசார மண்டபம் இந்து சமய, கலாசார அலுவல்கள் தினைக்கத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள், யாழ். மாநகர சபை மேயர் வி.மணிவண்ணனிடம் கையளிக்கப்பட்டது.

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாகச் சுமுகமான முறையிலே இடம்பெற்ற கலந்துரையாடலில் , இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தோடு சேர்ந்து நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக, சபையினரோடு கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர சபை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE