Tuesday 23rd of April 2024 06:20:12 PM GMT

LANGUAGE - TAMIL
.
2வது டெஸ்ட்; நிஷங்கவின் அரைச்சதத்துடன் இலங்கை அணி வலுவான தொடக்கம்!

2வது டெஸ்ட்; நிஷங்கவின் அரைச்சதத்துடன் இலங்கை அணி வலுவான தொடக்கம்!


சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.

இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதியத்திற்கு பின்னர் போட்டிஆரம்பமாகியிருந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி முதல் நாள் நிறைவின் போது 34.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பதும் நிஷங்க - திமுத் கருணாரத்னே சிறப்பான ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.

இலங்கை அணி 106 ஓட்டங்களை பெற்றிருந்த போது அணித் தலைவர் திமுத் கருணாரத்னே 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் பதும் நிஷங்க ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE