Thursday 28th of March 2024 02:15:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவன் கௌரவிப்பு!

அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவன் கௌரவிப்பு!


திறமைகளையும் சாதனைகளையும் பாராட்டுவோம் என்னும் கருப் பொருளில் கடந்த 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் TOP 10ற்குள் தெரிவு செய்யப்பட்ட மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் தோற்றி அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்று அகில இலங்கை ரீதியில் TOP 10ற்குள் தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்ந்த மாணவன் முஹமது அன்வர் ஜாவித் அப்தரை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

கல்வி ரீதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைத்த மாணவன் முஹமது அன்வர் ஜாவித் அப்தரை வாழைச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல் முன்பாக பாண்ட் வாத்தியங்களுடன் பாடசாலை நிருவாகமும் ஊர்வலமாக பாடசாலை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்று அகில இலங்கை ரீதியில் TOP 10ற்குள் தெரிவு செய்யப்பட்டு முதன்மை நிலை பெற்ற மாணவன் முஹமது அன்வர் ஜாவித் அப்தரை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ்.எஸ்.எம்.உமர் மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஜே.எப்.றிப்கா, வீ.ரி.அஜ்மீர், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE