Monday 17th of January 2022 10:06:16 PM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது!


சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்" மட்டக்களப்பில் நடைபெற்றது.

கடந்த காலத்தில் மாற்றுத்திரனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள். இன்று அவர்களை நாங்கள் மற்றவர்களுடன் ஒன்றிணைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் நாட்டுக்கு முன்னுதாரணமாகவும் பொருளாதார ரீதியில் பங்களிப்புசெய்யவேண்டிய தேவையும் மாற்றுத்திளனாளிகளுக்கு இருக்கின்றது என கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் தெரிவித்தார்.

சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு "ஊனமுற்ற நபர்களின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பு உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான கோவிட்-19 இற்குப் பிந்தைய உலகம்." எனும் தொனிப்பொருளிற்கு அமைய கிழக்கு மாகாண "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்." மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தானாமுனை மியானி மண்டபத்தில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி மேனகா உள்ளிட்ட திணைக்களம்சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றப்பட்டதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளியின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகியதுடன், மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் உறுப்பினர்களினால் கண்கவர் நடனம் மற்றும் பாடல் என்பன மேடையினை அலங்கரித்திருந்தது.

இதன்போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் மாற்றுத்திறனாளிகளுக்கும், பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களிற்கும் அன்பளிப்பு பரிசில்கள் வழங்கி பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தினால் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளிற்கு அமைய டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உரையாற்றிய அவர்,

இந்த மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கடந்துவந்த பாதைகளை நாங்கள் திரும்பிப்பார்ப்பது உண்டும். மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள மாவட்டமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான சேவையினை வழங்கும் மாவட்டமாகவும் இந்த மாவட்டம் காணப்படுகின்றது.

கடந்த காலத்தில் தொழில் தகைமைகளை பெற்றுக்கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்று ஓழுங்குகளையும் பரீட்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்த மாவட்டத்தில் வெற்றியும் காணப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் மாற்றுத்திரனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள். இன்று அவர்களை நாங்கள் மற்றவர்களுடன் ஒன்றிணைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் நாட்டுக்கு முன்னுதாரணமாகவும் பொருளாதார ரீதியில் பங்களிப்புசெய்யவேண்டிய தேவையும் மாற்றுத்திளனாளிகளுக்கு இருக்கின்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரித்திருந்தாலும் அடுத்த வருடத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும்நோயாளர்களுக்கான கொடுப்பனவுக்காக கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் 12கோடி ரூபா மேலதிகமாக திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளது.

நோய் தொடர்பானவர்களை பொறுத்தவரையில் 500ரூபா வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவுகள் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் காசநோய், கிட்டினி, புற்றுநோய் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட 500ரூபாய் கொடுப்பனவுகளும் 5000ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இது பாரிய அதிகரிப்பாகவுள்ளது. அரசாங்கம் நிதிநெருக்கடியில் உள்ளபோதிலும் கிழக்கு மாகாண ஆளுனரின் உதவியுடன் திறைசேரியிலிருந்து நேரடியாக பெற்றிருக்கின்றோம்.

தற்போது மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொள்வதற்கும் தலைமைத்துவங்களை பெற்றுக்கொள்வதற்குமாக தயார்படுத்தல்களை மாற்றுத்திறனாளிகள் முன்கொண்டுசெல்ல வேண்டும். அதற்காக மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசார்பற்ற நிறுவனங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE