Friday 19th of April 2024 09:58:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிகரெட்டை தடை செய்யும் வகையில்  சட்டம் இயற்றுகிறது நியூசிலாந்து அரசு!

சிகரெட்டை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றுகிறது நியூசிலாந்து அரசு!


நியூஸிலாந்தில் இளைய தலைமுறையினா் சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருட்களை வாங்குவதற்குத் தடை விதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்மூலம் நியூஸிலாந்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை படிப்படியாக ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இளைய தலைமுறையினா் சிகரெட்டுகள் உள்ளிட்ட புகைப்பொருட்கள் வாங்குவதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டமொன்றை அடுத்த ஆண்டு நிறைவேற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.

அந்தச் சட்டத்தின் கீழ் முதல் படியாக 14 அல்லது அதற்கு குறைந்த வயதினருக்கு சிகரெட் விற்பது தடை செய்யப்படவுள்ளது. இந்த வயது வரம்பை வருடாந்தம் ஒவ்வொன்றாக உயா்த்தவும் அந்தச் சட்டம் இடமளிக்கும்.

இந்தச் சட்டத்தால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாக ஒழிக்கமுடியாவிட்டாலும், அந்தப் பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் வெகுவாகக் குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

இதன்படி இந்த சட்டம் அமுலுக்கு வந்து, 65 ஆண்டுகளுக்கு பின்னரும் கடைகளுக்கு சென்று சிகரெட் வாங்க முடியும். ஆனால் அவர்கள் தங்களுக்கு 80 வயதாகி விட்டது என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

அத்துடன், 2025-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தில் வசிக்கும் 5 சதவீத்தினா் மட்டுமே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவா்களாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டு புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனது.

இளைஞர்கள் ஒருபோதும் புகைபிடிக்க தொடங்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம் என இது குறித்துக் கருத்து வெளியிட்ட நியூஸிலாந்து சுகாதார அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால் தெரிவித்தார்.

நியூசிலாந்து அரசு அமுல்படுத்த உள்ள இந்த புதிய சட்டத்தை சுகாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த சட்டமானது புகைப்பிடிப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும். இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது குறைந்து விட வாய்ப்புள்ளது என ஒட்டகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜானட் கூக் குறிப்பிட்டுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE