Tuesday 23rd of April 2024 09:30:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று மன்னாருக்கு விஜயம்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று மன்னாருக்கு விஜயம்!


வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று வியாழக்கிழமை (16) மாலை மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனா வினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கும் குறித்த வாழ்வாதார உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

-இன்று (16) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத் தூதுவர் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் களை சந்தித்தார்.

-இதன் போது மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு உணவுப் பொதிகள் மற்றும் வலை தொகுதிகளையும் வழங்கி வைத்தார்.

மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் கலந்து கொண்டு, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இணைந்து கடற்தொழிலாளர்களுக்கு வழங்கி வைத்தனர். இதன் போது மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: சீனா, இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE