Thursday 18th of April 2024 01:05:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட்; வோர்னர் - லாபஸ்சேன் அபாரம் - அவுஸ்ரேலியா 221/2!

ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட்; வோர்னர் - லாபஸ்சேன் அபாரம் - அவுஸ்ரேலியா 221/2!


இங்கிலாந்து - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலிய அணி வோர்னர் - லாபஸ்சேன் இணையரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி பகல் - இரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று ஆரயம்பமாகியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றிய போதிலும் டேவிட் வோர்னர் - லாபஸ்சேன் இணை நிதானமாக அதே நேரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தது.

2வது விக்கெட் இணைப்பாட்டமாக 172 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கை 176 ஆக இருந்த நிலையில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வோர்னர் 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாபஸ்சேன் இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

முதல் நாள் ஆட்ட நிறைவின் போது அவுஸ்ரேலிய அணி 89 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுள்ளது.

லாப்ஸசேன்-95 ஓட்டங்களுடனும், ஸ்மித்-18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE