Friday 29th of March 2024 09:58:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
செவ்வாய் கிரகத்தில் பழமையான பாறைகளை படம் பிடித்து அனுப்பியது நாசாவின் விண்ணூர்தி!

செவ்வாய் கிரகத்தில் பழமையான பாறைகளை படம் பிடித்து அனுப்பியது நாசாவின் விண்ணூர்தி!


செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோ என்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய பெர்செவரன்ஸ் விண்ணூர்தி (Perseverance Mars Rover) செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்து அவற்றைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

இந்தப் பாறைகள் அடிப்படையில் எரிமலை தோற்றம் கொண்டவை. ஒருவேளை அவை எரிமலை குழம்பின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

இந்த பாறைகளை பெர்செவரன்ஸ் விண்ணூர்தி கண்டறிந்து இருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தப் பாறைகளின் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படுகிறபோது அவை எந்தக் காலத்தில் தோன்றியவை என்பதை கண்டு பிடித்து விட முடியும் என நம்பப்படுகிறது.

இது குறித்த ஆய்வுகள் செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பரந்த அளவிலான சூரிய குடும்பத்தின் வரலாறு குறித்து எமக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோ என்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு கார் அளவிலான பெர்செவரன்ஸ் என்ற விண்ணூர்தியை உருவாக்கியது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தி விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ஊர்தி செவ்வாய் கிரகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 18-ஆம் திகதி வெற்றிகரமாக தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE