Friday 19th of April 2024 11:31:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவில் இடம்பெற்ற உயர்தர  மாணவர்களுக்கான கருத்தரங்கு!

முல்லைத்தீவில் இடம்பெற்ற உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு!


முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கிறிஸ்தவ நாகரீகத்தினை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கான கருத்தரங்கு 18/19.12.2021 இரண்டு நாட்கள் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

முல்லைப் பங்கு மறையாசிரியர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட 12 பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அருட்தந்தை ரமேஸ் (அ.ம.தி) , திருமதி வெனாஸ்சியஸ் ,செல்வி ராஜேந்திரன் ஆகியோரை வளவாளர்களாக கொண்டு மேற்படி கருத்தரங்கு ஒழுங்கமைக்கப்பட்டது. ஆகியோர் கலந்து மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். கரித்தாஸ் கியூடெக் வன்னி நிறுவனத்தினால் அனுசரணையில் முல்லைப் பங்கு மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலிலும் குறிப்பிட்ட கருத்தரங்கு இடம் பெற்றது. கருத்தரங்கினை நல்ல முறையில் நடத்துவதற்கு அனுமதி தந்து உதவிய வலயக் கல்விப் பணிமனை மற்றும் நடாத்துவதற்கான இடத்தினை தந்து உதவிய முல்லைத்தீவு மகாவித்தியாலய அதிபருக்கும் மற்றும் மாணவர்களை கருத்தரங்கிற்கு அனுப்பி பயன்பெற வைத்த பாடசாலை சமூகத்தினர், மற்றும் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் முல்லைப் பங்குத் தந்தை சார்பிலும், முல்லைப் பங்கு மறையாசிரியர் ஒன்றியம் சார்பிலும் நன்றியை தெரிவித்து நிற்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE