Friday 19th of April 2024 02:46:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
3 மாதங்களில் குறையத் தொடங்கும்  கொவிட் தடுப்பூசியின்  செயல்திறன்!

3 மாதங்களில் குறையத் தொடங்கும் கொவிட் தடுப்பூசியின் செயல்திறன்!


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் நோயெதிர்ப்பு செயல்திறன் 3 மாதங்களில் குறையத் தொடங்குவது இங்கிலாந்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது தடுப்பூசி பெற்ற 3 மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவதால் இதனைப் போட்டுக்கொண்டவர்கள் மீண்டும் தொற்று நோய் ஆபத்துக்கு முகம்கொடுக்க நேரிடுவதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

ஸ்கொட்லாந்தின் 20 இலட்சம் பேர், பிரேசிலில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 கோடியே 20 இலட்சம் பேரின் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

லான்செட் என்ற பிரபல பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது.

ஸ்கொட்லாந்தில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் நோயெதிா்ப்பு திறன் 2 வாரங்களுக்குப் பின்னர் கணிக்கப்பட்டது. அத்துடன் இதே தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் நோயெதிர்ப்பு திறன் 5 மாதங்களில் பின்னரும் கண்காணிக்கப்பட்டது.

இதில் தடுப்பூசி செலுத்தி 5 மாதங்களைக் கடந்தவர்களிடையே மருத்துவமனை சோ்க்கை மற்றும் இறப்பு வீதங்கள் ஒப்பீட்டளவில் 5 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE