Friday 29th of March 2024 12:29:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா; 164 பதக்கங்களை பெற்று மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம்!

கிழக்கு மாகாண விளையாட்டு விழா; 164 பதக்கங்களை பெற்று மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம்!


கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் 164 பதங்கங்களை பெற்று முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாணத்திற்கான விளையாட்டு விழா கடந்த 10 ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் திருகோணமலை கந்தளாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டம் 64 தங்கப்பதக்கங்கள், 52 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 52 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 164 பதக்கங்களை பெற்று முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

அத்தோடு திருகோணமலை மாவட்டம் 57 தங்கப்பதக்கங்களையும், 53 வெள்ளிப்பதக்கங்களையும் மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தமாக 130 பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் 42 தங்கப்பதக்கங்களையும், 34 வெள்ளிப்பதக்கங்களையும் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தமாக 98 பதக்கங்களைப்பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள இச்சாதனையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் சிறந்த வழிகாட்டல்களை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களுக்கும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் மற்றும் விளையாட்டு துறைக்கு பொறுப்பாகவிருந்து அனைத்து விதத்திலும் பூரண ஒத்துழைப்பினை வழங்கிய மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன் அவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அத்தோடு பிரதேச செயலகங்களுக்கான விளையாட்டு உத்தியோகத்தர்கள், மத்திய மற்றும் மாகாண விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், கழகங்களுக்கான பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இப்போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்கொணர்த்த அனைத்து போட்டியாளர்களுக்கும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் இதன்போது தெரிவித்துள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE