Friday 19th of April 2024 07:26:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொவியோ தாத்தா சிங்கள திரைப்படம் தமிழ் உப தலைப்புடன் நாளை யாழில் வெளியீடு!

"கொவியோ தாத்தா" சிங்கள திரைப்படம் தமிழ் உப தலைப்புடன் நாளை யாழில் வெளியீடு!


வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தினை ஏற்படுத்தும் முகமாக கொவியோ தாத்தா ( கமக்கார தந்தை) என்னும் தமிழ் உபதலைப்புடனான சிங்கள முதல் திரைப்படம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளதாக கொவியோ தாத்தா திரைப் படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளருமான தர்ஷன ருவான் திசாநாயக்கா தெரிவித்தார்.

நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ள திரைப்படம் தொடர்பில் யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரு உறவுப் பாலமாக வடக்கு தெற்கு விவசாய பெருமக்களையும் முன்னிலைப்படுத்தி இயற்கை விவசாயத்தை பொதுமக்களுக்கு ஊக்குவிக்கவும் இராசாயன விவசாய முறையிலிருந்து இயற்கை விவசாய முறைக்கு விவசாய பெருமக்களை மாற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் நாளையதினம் வெளியீடு செய்யப்படவுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு விவசாய தந்தையின் எண்ணக் கருவில் உருவான திரைப்படமானது கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக தயாரிக்கப்பட்டு ஒரு இயற்கை முறையிலான விவசாயத்தினை மேற்கொள்வதனை முன்னிலைப்படுத்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாய துறை சார்நத திரைப்படமானது வடக்கிலுள்ள விவசாய பெருமக்களும் பார்ப்பதன் மூலம் வடக்கிலும் சேதன விவசாய முறையினை ஊக்குவிப்பதன் ஒரு அங்கமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

இராசாயன விவசாய முறை காரணமாக சிறுநீரகப் பிரச்சினை மேலும் பல பிரச்சினைகள் உருவாகி வருகின்றது அவ்வாறான நோய் தாக்கங்கள் மற்றும் இயற்கையான உணவு பழக்க வழக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது தெற்கிலிருந்து இந்த திரைப்படத்தினை வடக்கில் வெளியீடு செய்வதன்நோக்கமானது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் ஒரு உறவுப் பாலத்தை ஏற்படுத்தும் நோக்கமாக காணப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் வடக்கில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுதெற்கில் வெளியீடு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த திரைப்படத்தில் வடக்கிலுள்ள கலைஞர்கள் முன்னிலைப்படுத்துவது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


Category: சினிமா, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE